பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவிற்குத் துணையாக நாடுவன, சிலப்பதிகாரத்தில் வரும் இரு சிறுவரிகளும் அவற்றிற்கு அரும்பதவுரையாசிரி யரும், அடியார்க்கு நல்லார் அவர்களும் கூறும் உரை களுமே ஆம் ஒன்று, உரை பெறு கட்டுரையில், 'கொங்கிளங் கோசர் தங்கள் நாட்டகத் து நங்கைக்கு விழா வொடு சாந்தி செய்ய மழை தொழில் என்றும் மாறாதாயிற்று' என்ற தொடரும் அத்தொடரில் வரும் கொங்கிளம் கோசர்" என்ற தொடருக்கு, அரும்பதவுரைகாரர் கு று ம் பு செலுத்துவார் சில வீரர் என்றும், அடியார்க்கு நல்லார் கொங்கு மண்டலத்து இளங்கோவாகிய கோசர் என்றும் விளக்கம் அளித்தது. இரண்டாவது, வரந்தரு காதையில், கண்ணகிக்கு சிலையெடுத்த விழாக்காண வந்தோர் பட்டியலில், "குடகங் கொங்கரும் இடம் பெற்றிருப்பது. கொங்கிளங் கோசர் தங்கள் நாட்டகத்து விழாவொடு சாந்தி செய்தனர் எனக் கூறும் உரைபெறு கட்டுரை, அவ் வாறு விழா செய்தவராகக் கொங்கிளங் கோசரை மட்டும் குறிப்பிடவில்லை. அவர்கள் அது செய்வதன் முன்னர் க் கொற்கையில் இருந்த வெற்றி வேற்செழியன் விழாவொடு சாந்தி செய்தான். அவன் சாந்தி செய்ய, அவனைத் தொடர்ந்து கோசர் செய்ய, அவர் செயல் கேட்டு கயவாகு பாடி விழாக் கோள் பன்முறை எடுத்தான் அவனைத் தொ டர்ந்து, சோழன் பெருங்கிள்ளி, கோழி அகத்துப் பத்தினிக் கோட்டம் சமைத்து நித்தம் விழாவுக்கு வகை செய்தான். இவ்வாறு விழா எடுத்த இந்நால்வருமே வஞ்சிக்கண் செங்குட்டிவன் கண்ணகிக்குக் கோயில் அமைத்துப் படிமம் 116