பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றும் மோரியர்களின் காலம் " என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. - அவ்வரலாற்று நூலின் 254ஆம் பக்கத்தில் திருவாளர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் “ வெற்றிக் கொடியுடையவராகிய கோசர், தங்கள் பகைவர்களுக்கு எதிராகப் போர் மேற்கொண்டு, பலரை வெற்றி கொண்டனர்; ஆனால் மோகூர் அவர்களுக்குப் பணிய வில்லை. ஆகவே பெரிய படையுடையவராகிய மோரியர், ஒரு படை யெடுப்பை மேற்கொண்டனர் ' என்று குறிப்பிட்டுள்ளார். அதே நூலின் 255-ம் பக்கத்தில் அவரே, “கோசர்க்குப் பணிய மறுத்த மோகூர்த் தலைவனைப் பணிய வைக்கக், கோசர்க்கும், மோரியர், ஒருமுறை துணை போயினர். இப் படையெடுப்பின் போது வடுகரும் பங்குகொண்டனர் என்று கூறியுள்ளனர். - - திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் தம் முடைய மற்றொரு வரலாற்று நூலான ' வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டு விசய நகர வீழ்ச்சி வரையான தென்னிந்திய வரலாறு ' என்ற ஆங்கில நூலின் 85-ஆம் பக்கத்திலும் அதே கருத்தை மீண்டும் கூறியுள்ளார். அந்நூலின் 85-ஆம் பக்கத்தில் அவ்வாறு கூறிய அவர் அதே நூலின் 86-ஆம் பக்கத்தில், ' நாம் அறிந்த வகையில் மெளரியர் காலத்துக்குப் பிந்தியதான, சங்க இலக்கியங்களில், “ கோசர், மோகூர்த் தலைவனின் நண்பர்கள் ஆனால், அது, நிச்சயமாக, முந்தைய நிகழ்ச்சிகளின் விளைவாக இருத்தல் கூடும் ' என்று கருத்துத் தெரிவித் துள்ளார். - சென்னைப் பல்கலைக்கழக வரலாற்று நூல் வரிசையுள் 9-வது ஆக, 1935-ல் வெளிவந்த சோழர் " என்ற 3