பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிள்ளி என்றே"உரைபெறு கட்டுரை கூறுகிறது. ஆகவே விழாவிற்கு வந்திருந்தோர் அனைவரும், தம் நாட்டகத் தே விழா எடுத்திலர் தம் நாட்டகத்தே விழா எடுத்தோர் அனைவரும் விழாக் காண வஞ்சிக்கு வந்தாரல்லர் எனத் தெரிகிறது. ஆகவே, "விழாவிற்கு வந்திருந்தார்கள் கொங்கர்; அக்கொங்கு நாட்டில் விழாக் கொண்டாடினார்கள் கோசர் ஆகவே, கொங்கரும் கோசரும் ஒருவரே எனக்கொள்வது பொருந்தாது. கொங்கர் வேறு; கோசர் வேறு என்பதை உணர்த்தவே, கொங்கரைக் குடகடலோடும், கோசரைக் கொங்கோடும் தொடர்பு படுத்தியுள்ளார். ஆசிரியர் இளங்கோவடிகள் அவளை, அவ் விருவருமே கடவுளாக ஏற்றுப் போற்றினார்கள் எ ன் ற அவ்வேறுபாட்டை உணர்த்தவே, வேட்டுவ வரியில், 'இவளோ கொங் கச் செல்வி, குடமலையாட்டி' என அவர்தம் வாழிடங் களை வேறு வேறாக எடுத்து ஒதினார். ஆக எவ்வகை யான் நோக்கினும், குடகக் கொங்கன் வேறு; கொங்கு நாட்டுக் கோசர் வேறு என்பது தான் நிலைநாட்டப் பெறு கிறதே அல்லாமல், கொங்கரும், கோசரும், ஒருவராவர் எனக் கொள்வது சிறிதும் ஏற்புடைத்தாகாது என அறிக: கோசர் வாழிடம் கீழ் கடலைச் சார்ந்தது : கோசர் என்ற தலைப்பிட்ட தம் சிற்றாராய்ச்சி நூலில்,ே திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள், 'கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி யுழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல்லிளங் கோசர் கண்ணியயரும் - மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் 3. - * * * * * * * *** - - - - - - - - A = * * * 119