பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வாட்டாற்று எழினி ஆதன், கோசர் எறிந்த வேல் பாயப்பெற்று இறந்தனனா? வாட்டாற்று எழினி ஆதன், கோசர் எறிந்த வே ல் பாயப் பெற்று இறந்தனனா? ஆம், என்கிறார், திருவா ளர். மா. இராசமாணிக்கம் பிள்ளையவர்கள். தாம் எழு திய சோழர் வரலாறு' எனும் நூலில், "வாட்டாறு என்ற ஊரையும், செல்லூர் என்பதனையும் ஆண்ட எழினி ஆதன் என்பவனைக் கோசர் எதிர்த்தனர். அவன் செல்லூர்க்குக் கிழக்கே, கோசரோடு போரிட்டு, வேல் மார்பில் தைக்கப் பெற்று இறந்தான்' 'எனக் கூறியிருப்பது காண்க. அவ்வாறு கூறிய திருவாளர் பிள்ளை அவர்கள், “அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணா அது பெருங்கடல் முழக்கிற்றாகி, யாணர் இரும்மிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கண் கோசர் நியமம்' என்ற மதுரை மருதன் இளநாகனார் பாடலையும்,' "கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி உழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல் இளங்கோசர் கண்ணி அயரும் - அல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் றிவிடத்து உலையாச் செறி அரை வெள்வேல் 126