பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தம் வரலாற்று நூலின் பகுதி I-பக்கம் 27-ல், திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், “கோசர், தென்னாட்டைத் தம் ஆளுகைக்கீழ்க் கொண்டு வரும் முயற்சி மேற்கொண்டனர். மோகூர் மன்னன் அவர்களுக்குப் பணிய மறுக்கவே மோரியர் தம் பெரிய படைகளோடு போர் தொடுத்து வந்தனர் என்று கூறியுள்ளார். தம் கூற்றுக்குச் சான்றாக அகநாநூறு 251-ம் பாடலைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

4. புலவர் கோவிந்தன் கருத்து :

தென்இந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தின் இலக்கியத் திங்கள் ஏடு “செந்தமிழ்ச் செல்வி” 1952-59 ஆண்டு இதழ்களில் நான் எழுதிய கட்டுரையில், ஓரிடத்தில், “தமக்குப் பகையாவார் எனக் கருதியோரை எல்லாம் அழிப்பதையே தொழிலாகக் கொண்ட கோசர், தமக்குப் பணியாது நின்ற மோகூரைத் தாக்கினர்; மோகூர் பணிந்திலது. ஆகவே கோசர்க்குத் துணையாக மோரியர் என்பார் வந்தனர். போரின் முடிவு தெரிந்திலது.” என்று கூறிப்பிட்டுள்ளேன்.

*

பிறிதோரிடத்தில், “பாண்டியன் மறவனாகிய மோகூர்ப் பழையன் என்பானைக் கோசர் தாக்கியதன் முடிவுயாது என்பது அறியப்படவில்லை.எனினும், கோசர், பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஏவல்கேட்கும் வீரராய், அவன் அவைக்களத்தின் கண் விளங்கினர் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. தன் படைத்தலைவனோடு போரிட்ட கோசர், தன் படையில் இருப்பது தனக்குப்பெருமையும் சிறப்பு அளிக்கும் செயலாகும் என்று கருதி அவ்வாறு கொண்டான் போலும் என்றும் கருத்து தெரிவித்துள்ளேன் என்பது உண்மை.

4