பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரைக்கண், இரைதேர்ந்துண்ணும் இனப்பறவை கள் எழுந்து ஓடுமாறு, சிறு நொய் மணல்களை அள்ளித் துவும். ஆங்கு வீசும் கடற்காற்று ; அவ்வூர் வாழ் கோசர் முதலாம் மக்கள் மட்டுண்டு மகிழ்ந்து குரவை முதலாம் கூத்தாடி இன்புறுவர். இத்தகு வளஞ்சால் பெருநகரைப் பெற்று ஆளும் எழினி.ஆதன், ஊக்கம் அற்றார்க்கு உறுதுணையாய் நின்று காக்கும் உரனும், அறிவுரை அளித்து ஆகும் வழி காட்டும் ஆருயிர் நண்பர் இல்லார்க்கு ஆருயிர் நண்பனாய் அமைந்து காக்கும் அறிவுத் திறனும் உடையனாவன். இவ் வாறு ஆண்மையும், அறிவும் உடையனாய், அறிஞர் போற்ற வாழும்வேளிர் வழிவந்த எழினி ஆதன் தன்னைப் பாடி வருவார்க்கு வரையாது வழங்கும் வள்ளி யோனும் ஆவன். பரிசில்வேண்டி வாட்டாற்றுக்கு வருவார்க்குக் கொழுத்த இறைச்சியைச் சுட்டு சுவையுடைய தாக்கி அளித்தும்; வடித் தெடுத்த மதுவை வழங்கியும், நெய்யும் முயற்கறியும் நிறையப் பெய்து ஆக்கிய அறுசுவை உணவை அளித்தும் மகிழ்விப்பன்: திறந்தது திறந்தவாறே என்றும் அடையாப் பெருவாயில் உடையதாக விளங்கும் தன் நெற்களஞ்சியத் திலிருந்து நெல்லை வாரி வாரி வழங்குவன்'. இதில் வாட்டாற்று எழினி ஆதனின் நாட்டுவளம்; அவன் நண்பர்களைப் பேணும் நாகரீக நலம்; இர வலரைப் பேணும் கொடைவளம் ஆகியன மட்டுமே கூறப்பட்டுள்ளன நாட்டு வளம் கூறும் பகுதியில் அந் நலத்தின் ஒரு பகுதி யாகக், கோசர் மது குடித்துக் குரவையாடும் நலமும் கூறப்பட்டுள்ளது. அது ஒன்றையே கொண்டு, வாட்டாற் றான், கோசரால் கொல்லப்பட்டான் எனல் கருத்துக் குழப்பம் அல்லது வேறு அன்று: வாட்டாற்று எழினி ஆதன் 129