பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும், பேராற்றலும் வாய்ந்த பழையனை வெல்லுதல் அறு கையால் இயலாது போயிற்று: பழையன் அறுகையை வென்று தொலை நாடு துரத்தி விட்டான். மோகூரில் தோல்வி கண்ட அறுகை நண்பர்களைக் கான வும் நாணினான். அதனால் தன் நாட்டை விட்டுப் பிரிந்து சேணாடு சென்று தலைய றைவாக விட்டான். இதை அறிந்தான், அறுகையின் நண்பன் செங்குட்டுவன் நண்பனுக்கு உண்டான இழிவு, தனக்கு உண்டான இழிவு எனக் கருதினான். உடனே பெரும் படையோடு சென்று மோகூரைத் தாக்கினான். பழையன் தோல்வியுற்றசன் : செங்குட்டுவன், அவனை அந்த அளவோடு விட்டான ல் லன். பழையன் காவல் மரமாம் வேம்பை வெட்டி வீழ்த் தி னான். முரசு செய்தற்கு உதவும் சிறு சிறு துண்டுகளாக்கித் தன்னுTர்க்குக் கொண்டு சென்றதன் மூலம், நண்பனுக்கு உண்டான பழியைத் துடைத் தான். அதன் வழி. பழையன் மாறனை, தமிழக வரலாற்றிலிருந்தே துரத்தி விட்டான். “நுண் கொடி உழிஞை, வெல்போர் அறுகை, சேனன் ஆயினும், கேள் என மொழிந்து, புலம்பெயர்ந்து ஒளித்த கனையாப் பூசற்கு, அரண்கடா வுறீஇ அணங்கு நிக்ழ்ந்தன் ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு, . நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் கடிந்து முரசு செய முரச்சிக் களிறு பல பூட்டி ஒழுகை உய்த்தோங்' - பரணர் கூற்றுக்குச் சான்று பகர்ந்துள்ளார் சேரன் செங்குட்டுவனின் இளவல் அவர்களும் : . . . . - “பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய ே 137.