பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. செங்குட்டுவன் கண்ணகிக்குக் கொங்கில் கோயில் எடுப்பித்தது அடியார்க்கு நல்லார்க்கு உடன் பாடில்லை என்பது பொருந்துமா? சேரன் மாதேவியோடு, மலை வளம் காணச் செங்குட்டு வன் சென்ற போது, அவனை வந்து வழிபட்ட கானவர். கண்ணகி, தாம் காணக், கணவனோடு வானாடடைந்த செய்தியைக் கூற, அது கேட்டு வியந்து நின்ற வேந்த னுக்கு, அவனுழை இருந்த தண்டமிழ்ப் புலவர்.சீத்தலைச் சாத்தனார், சோழர் தலைநகர் புகாரில் நடைபெற்ற கண் ணகி- கோவலன் திருமணம், கோவலன்-மாதவி உறவும் பிரிவும், கண்ணகியும், கோவலனும் பாண்டியர் தலைநகர் மதுரை அடைந்தது. ஆங்குக்கோவலன் கொலையுண்டது அதனால் கொதித்து எழுந்தகண்ணகி நல்லாள், காவலன் பேரூரைக் கனை யெரியூட்டியது; பின்னர், நெடுவேள் குன்றம் கடந்து வ ந் து கணவனோடு வானாடடைந்த நிகழ்ச்சிகளை நிரலே விளக்கினார். அது கேட்ட செங்குட்டுவன், பாண்டியன் உயிர் துறக்க உடன் உயிர் துறந்த பாண்டிமாதேவி, கணவன் கொலை யுண்டு போகப், பழிக்குப் பழி வாங்கி விட்டுத் தன்னாட டைந்த கண்ணகி, ஆகிய இருவரில் 'நன்னுதல் வியக் கும் நலத்தோர் யார்?' எனத் தன் அருகில் இருந்த அரச மாதேவியைக் கேட்க, அவள் ‘காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ, பெருந்திரு உறுக வானகத்து; அத்தி 142