பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் நிற்க; நம் அகனாடு அடைந்த இப்பத்தினிக் கடவு ளைப் பரசல் வேண்டும்' என்ற வேண்டுகோளை வைக்க அவ் வேண்டுகோள் ஏற்ற செங்குட்டுவன், வஞ்சிக்கண், கண்ணகிக்கு கற்கோயில் கட்டி நித்தல் விழாவுக்கு வகை செய்தான். கண்ணகிக்குக் கற்கோயிலுக்கு வழிசெய்து விட்ட சாத் தனார், கற்கோயில் கால வெள்ளத்தால் நிலை குலைந்து போகக் கூடியது, ஏன், காணாமலே போகவும் கூடியது: நிலை குலையாது காணக் கிடக்கினும், உம் முடையதா, எம்முடையதா என்ற வழக்கிற்கு உள்ளாகக் கூடியது. என் றெல்லாம் முன் கூட்டியே அறிந்திருந்தமையால், எக் காலத்தும் அழிவுக்கும், அழிவழக்கிற்கும் உள்ளாகாத கலைக் கோயில் கட்ட விரும்பினார். அதனால் கண்ணகி வானாடு அடைந்த செய்தியைச் செங்குட்டுவனுக்குக் கூ றி ய கானவர்களைத் தலைநகர்க்கு அழைத்துச் சென்றனர். அவர்களை, ஆங்குக் குண வாயில் கோட்டத்தில், அரசு துறந்து அறவுரை வழங்கிக் கிடக்கும் இளங்கோ அடிகளார் முன் நிறுத்தி,செங்குட்டுவன் பால் கூறியதை, அவர்களைக் கொண்டுக் கூறச் செய்தும், தாம் ஆங்குக் கூறியதைத் தாமும் கூற, அடிகளார், 'சிலப்பதிகாரம் என்னும் பெய ரால், நாட்டுதும் யாம், ஒர் பாட்டுடைச் செய்யுள்' எனக் கருத்து அறிவிக்க, அது கேட்ட சாத்தனார், அடிகளாரை நோக்கி, ‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள்! நீரே அருளுக என வேண்டிக்கொள்ள, இளங்கோ அடிக ளார் உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுளாம், இற வா இலக்கியப் பெருங்கோயிலைக் கட்டி வழங்கினார். கண்ணகி நல்லாளுக்குக் கோயில் கட்டுமாறு Gerశr மாதேவி விடுத்த வேண்டுகோளைச் செங்குட்டுவன் மறுக்க 143