பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை. உடன் இருந்த தண்டமிழ் ஆசான் சாத்தனார் மறுக்க வில்லை; நின் மூத்தோன் கற்கோயில் கட்டிவிட் டான்; நீ கலைக்கோயில் கட்டுக' என்ற வேண்டுகோளை சாத்தனார் விடுத்த போது, இளங்கோ அடிகளார் மறுக்க வில்லை சிலம்பு ஒலிக்க, அதற்கு முதற்கண் உரை எழுதிய அரும்பத உரையாசிரியர் மறுக்க வில்லை; இவர்கள் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒன்றை, அடியார்க்கு நல்லார் ஏற்க வில்லை, என்கிறார், திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1951ல் வெளி யிட்ட கோசர்" என்ற ஓர் சிற்றாராய்ச்சி நூலில், செங்குட் டுவன் கண்ணகிக்குக் கொங்கில் கோயில் எடுப்பித்தது அடியார் க்கு நல்லார்க்கு உடன்பாடு இல்லை’ என அவர் கூறியிருப்பது காண்க. இதற்கு அவர் காட்டும் காரணம், "குடக் கொங்கர் என் பார் குடகுப் புறத்து நின்று கொங்கில் தங்கி உள்ளார் என்று இவர் (அடியார்க்கு நல்லார்) கருதினார் ஆவர், இக் கருத்துக் கொங்கிளங் கோசர் என்னுந் தொடர்க்கு அவர் கூறிய உரையான் உய்த்துணரப்படுவது' என்பதுவே. "குடகக் கொங்கர் என்பார், குடகபுறத்து நின்று கொங் கில் தங்கியுள்ளார்' என்று அடியார்க்கு நல்லார் கருதி னார் போலும் என திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்கள் கூறியிருப்பது அவரது வெறும்கற்பனை அல்லது கருத்துச் செறிவுடையது அன்று: அடியார்க்கு நல்லார் அவ்வாறு கருதினார் என்பதற்குத், திருவாளர். அய்யங் கார் அவர்கள் காரணம், இக் கருத்து, கொங்கிளங் கோ சர்’ என்னும் தொடருக்கு அவர் கூறிய உரையான் உய்த் துணரப்படுவது' என்பதே. - 144