பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கொங்கிளங் கோசர்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய உரைதான் என்ன? கொங்கு மண்டலத்து இளங் கோவாகிய கோசர்’ என்பதே அடியார்க்கு நல்லார் கூறிய உரை, கொங்கில் கோவில் கட்டியது அடியார்க்கு நல் லார்க்கு உடன்பாடில்லை என்பதற்கு, இந்த உரை எவ் வாறு ஆதாரம் ஆகும் ? அடிப்படையில்லா ஒன்றை ஆதாரமாகக் கொண்டு, அடியார்க்கு நல்லாரையும் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு, தாமும் ஆழ்ந்து போனதோடு நில்லாமல், குடகக் கொங் கர் என்பது கொங்கினின்றும் குடகடல் புறத்துக் குடியேறி னாரை நன்கு குறிக்கும் என்று உணர்க. கொங்கிற் குடகர் என்றால் அடியார்க்கு நல்லார்கருத்து நன்கு பொருந்தும். அங்ங் ன் மல்லாது குடகக் கொங்கர் என்றலாற் குடகப் புறத்தும் கொங்கர் என்ற பெயரையே யுடையர் என்று தெளிய நிற்றல் காண் க' எனக் கூறி, மேலும் குழம்பியுள் ளார். குழப்பியுள்ளார். - - - குடக நாடு வேறு அதில் வாழ்வார் குடகர் : கொங்கு நாடு வேறு அந்நாட்டில் வாழ்வார் கொங்கர்,குடகர் வேறு கொங்கர் வேறு வேட்டுவ வரியில், இளங்கோ அடிகளார் இவ்வேறுபாடு நன்கு தோன்ற கண்ணகியை வேட்டுவர் வாயில் வைத்து இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி என்று பாராட்டியிருப்பதும் அதற்கு அடியார்க்கு நல்லார், இங்கிருக்கின்ற இவள் கொங்கு நாட்டினை ஆளும் செல்வி; குட் நாட்டினை ஆளும் செல்வி, எனக் கொங்கு நாடுவேறு குடநாடு வேறு என்பது தெளிவாக உரை கூறியிருப்பதும் காண்க. குடகர்க்குத் தனிநாடு இருந்தது போல் கொங்கருக் குத் தனிநாடு இருந்ததுபோல், கோசர்க்குத் தனி நாடு எதுவும் இ ல் ைல : நாடோடி வாழ்வினர்கோசர். ஒரு காலை சோணாட்டுக் கடற்கரைக் கண்னதான செல்லுர்க்கு அ னி த் தா ன நியமத்தில் வாழ்ந்தனர். 145