பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரிசை என்ற வரிசையில், ஆறாவது வரிசையாகிய, திரை யன் முதலிய 29 பேர்கள்' என்ற நூலில், "என் ஆட்சிக்கு அடி பணியாது, என் அரசோ டொப்ப அரசோச்சிய பெருமை வாய்ந்த பேரரசுகள் என மெளரி யப் பேரரசன் அசோகனால், சிறப்பித்துக் கூறப்பெற்ற தென்னிந்திய அரச இனங்கள் நான்கனுள், சத்ய புத்ரர் இனமும் ஒன்று. இச் சத்திய புத்ரரே, கோசராவர் என வர லாற்று நூலாசிரியர் பலரும் கருதுவர் எனக் கூறி, வர லாற்றுப் பேராசிரியர்கள் பால் பொறுப்பினை ஏற்றி விட்டு நான் தப்பித்துக் கொண்டேன். வரலாற்றுச் சான்று ஏதேனும் காட்டினேனா? எந்த வரலாற்றுப் பேராசிரியர்களையாவது துணைக்கு வைத் துக் கொண்டேனா? என்றால் இல்லை! திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள் கருத்து : - அண்ணாமலைப் Uು 55 6ು ಹ கழகம், 1951ல் வெளி யிட்ட கோசர் என்ற தலைப்பிட்ட ஓர் சிற்றாராய்ச்சி நூலில் திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள், - இனி வால்மீகி ராமாயணம் 32ஆம் சருக்கத்து, பிர மற்கு மகனாராகிய குசர் என்பார் பெருந்தவம் புரிந்து நோன்புகளைத் தவராது செய்து தருமங்களையுணர்ந்து பெரியோர்களைப் பூ சி த் து பெருமை பெற்றிருந்தார். அந்த மகாத்மா நற்குலத்தில் பிறந்து நல்லொழுக்க மிக்க வைதர்ப்பி என்பவளிடத்தில், நற்குணங்களால் தம்மை யொத்த குசாம்பன், குச நாபன், ஆதுர்த்தரஜஸ், வஸா என்னும் பெயருள்ள நான்கு புதல்வரைப் பெற்றார்.குசர் `ಕ್ವೆಕ್ಟ್ಸ್ಕ್ಡ நிறைந்தவரும், புெரிய ஊக்கமுள்ளவரும் தருமத்தில் நிற் 149