பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவரும் வாய்மையே பேசுகின்றவரும் ஆன அப்புதல்வர் வரை நோக்கிக், குடிகளைப் பாது காத்தல் செய்யுங்கள், தர்மத்தை நிரம்ப அடை வீர்கள் என்று சொன்னார், உலகிற் கொத்த நாரில் சிறந்த அந் நால்வரும் குச ருடைய வார்த்தையைக் கேட்டு, அப்போதே நான்கு நகரங்களில் புகலாயினர். ராம பேரொளி நிறைந்த குசாம்பர், கெளசாம்பிஎன்ற தாமபுரியை உண்டாக்கினார். தர்ம சிந்தையர் ஆகிய குசநாபர், மஹோதயம் என்னும் புரத்தை உண்டாக்கினார் ஆதுர்த்த ரஜஸ் என்னும் மகிபதியானவர் புரங்களில் சிறந்த தர்மாரண்யம் என்னும் ஊரை உண்டாக்கினார். வலை என்பவர் கிரிவ்ருஜம் என்பதை உண்டாக்கினார். - எனக் கூறப்படுதலான், குசர் என்பவரின் மக்கள் நாலூர்களைப் படைத்தனர் என்பது கேட்கப்படுவது. இக்குசர் வழியினர் கெள சர் எனப்பட்டு அவரே கோசர் எனப் பட்டனர் என்றும், இவர் முதல்முதலாக நாலூரினின் றும் பெருகியதனால் நாலூர்க் கோசர் எனப் பெயர் சிறந் தனரென்றும் கருதுவது மிகவும் பொருந்தியதாகும் எனக் கூறியுள்ளார்.: - - திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்களும், கேட் கப் படுவது, கருதுவது என்றுதான் கூறியுள்ளாரே யல்லது, கல்வெட்டுச் சான்றோ, இலக்கியச் சான்றோ காட்டினார் அல்லர். - - கோசர் என்ற தம் சிற்றாராய்ச்சி நூலின் ஓரிடத்தில் கோசரைக் குசர் என்பார் வழியில் வந்தவர் எனக் கூறிய திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள் அதே நூலின் பிறிதோரிடத்தில், கோசர், கைக்கோளர் ஆவர் என்றும் கூறியுள்ளார், அவர் கூறுவது பின் வருமாறு. 156)