பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"முதுமையிலும் இளமைப் பண்பு வாடாத உள்ளமும், சொன்ன சொல் பெயராத வாய்மையும் சிறப்பாக உடைய ராதலால், இக் கோசரைச் சங்கப் புலவர்கள், ஒன்று மொழிக் கோசர்" என்று கூறியுள்ளனர். இக் கோசருள் சிலர், இளங்கோசர் இளம்பல் கோசர் என்று கூறப் பட்டனர். பாபிலோனியாவில் இருந்து"முதலில் வந்தோ ரை மூத்தோர் என்றும், பின் வந்தோரை இளையோர் என்றும் குறிப்பது தமிழ் வழக்கு. அதனால் பின் வந்த கோசர் இளங்கோசர் எனப் பெற்றனர் 10 இவ்வாறு கூறிய திருவாளர் ஒளவை அவர்கள் தம் கூற்றிற்கு ஏதேனும் அகப் புறச்சான்றுகள் காட்டினாரா என்றால் இல்லை! டாக்டர் அ. கிருட்டினசாமி அவர்கள் கருத்து தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினரால் தொகுக்கப் பெற்று தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்காக, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1986ல் வெளியிட்ட தமிழ் நாட்டு வரலாறு. சங்க காலம்: அரசியல்' என்ற தலைப்பிட்ட நூலில், கொங்கர் பற்றிய வரலாறு எழுதிய திருவாளர் டாக்டர். அ. கிருட்டினசாமி அவர்கள், தம்கட்டுரையில், திருவாளர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கூற்றை மறுத்துள்ளார். - மேற் கூறப் பெற்ற செய்திகள் உண்மை வரலாற்றுச் செய்திகளா என்று ஆராயத் தக்க தாகும். பாபிலோனிய நாட்டில் இருந்த கோசியர் (Kosseers) என் போர் தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறினர் என்பதற்கு, வரலாற்றறி еђfisi o sva sursorp. (Historiyans History, of the world) என்னும் நூலில் மேற்கோள் தவிர வேறு உள் நாட்டுச் 154