பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றுகளைப் பிள்ளையவர்கள் காட்டவில்லை. அவர்கள் எந்தக் காலத்தில் கொண்கானத்திற்கு வந்தனர்? ஏன் வந்தனர்? என்ற கேள்விகளுக்குப் பதில் கிடையாது. ஆகையால், கோசர்கள் பாபிலோனியா நாட்டிலிருந்து கொண்கானத்தில் குடியேறினர் என்பது அறிஞர்கள் ஒப் புக் கொள்ளக் கூடிய செய்தியாகாது' எனக் கூறித் திரு வாளா ஒளவை அவர்களின் முடிவை மறுத்துள்ளார்கள். மேற் கூறியவாறு, திரு. ஒளவை அவர்களின் கூற்றை மறுத்த திருவாளர். டாக்டர். அ. கிருட்டினசாமி அவர்கள், அவ்வாறு மறுத்தமைக்கான காரணங்கள் எவற் றையேனும் காட்டினாரா என்றால் இல்லை; வறிதே, அறிஞர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்’ என்பது வாத நெறியாகாது. திருவாளர். ஒளவை அவர்கள் கூற்றை மறுத்துவிட்ட திருவாளர் கிருட்டிணசாமி அவர்கள், பிறன் கோள் மறுத்து தன் கோள் நிறுவுவது' என்ற வாத நெறிப்படி இதுதான் முடிவு என முடித்துக் காட்டினாரா? என்றால் இல்லை : - திருவாளர் ஒளவை அவர்கள் கூற்றை மறுத்து விட்டு அவர் கூறி யிருப்பதெல்லாம் இவ்வளவே, கோசர்களைக் கொண்கான நாட்டில் தொன்று தொட்டு வசித்து வந்த மறக்குடி மக்களாகவே நாம் கொள்ளவேண்டும், பேரரசன் அசோகருடைய பாறைக் கல்வெட்டில் காணப்படும் சத்திய புத்திரர்’ என்னும் சொற்றொடர், வாய் மொழிக் கோசர் ஒன்று மொழிக் கோசர்’ எ ன் ற சங்க நூ ல் க ளி ல் பயின்று. வரு ம் தொடர்களுக்கு ஒற்றுமை யுடையதாக நாம் கொள்ளலாம், ஆகவே கோசர்கள் அயல் நாட்டினர் அல்லர் என்பது தெரியப் படும்"12 என்ற இவ்வளவே. கோசர்கள் அயல் நாட்டினர் அல்லர்’ என்ற தம் முடிவுக்கு அவர் ஏதேனும் அகச் சான்று காட்டினரா? என்றால் இல்லை. நாம் கொள்ள வேண் டும்’, கொள்ளலாம் என்பன போலும் சொற்றொடர்கள் வரலாற்றுச் சான்றுகள் ஆகிவிடா. 155