பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாளர். வி. ஏ. ஸ்மித் அவர்கள் கருத்து : "இந்தியாவின் பண்டைய வரலாறு’ (Early History of India) என்ற நூலின் ஆசிரியராகிய திருவாளர். வி. ஏ. ஸ்மித் (W. A. Smith) அவர்கள், கோசராவர் என வரலாற் றுப் பேராசிரியர்களால் கருதப்படும், அசோகன் பாறைக் கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும், "சத்யபுத்ரர்' பற்றி 'துளு மொழி பேசப்படும், மங்களுரைத் தலைமை இடமாகக் கொண்ட சிறிய நாடே, சத்யபுத்ரர் நாடாகக் கொள்ள லாம்' எனக் கூறிவிட்டு, அடிக்குறிப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். - "திருவாளர். ஏ. ஜி. சாமின், அவர்களின் கண்டுபிடிப்பு ஒன்று சத்யபுத்ரர் என்ற பெயர் பற்றிய விளக்கம் பெற உதவும் குறிப்பு ஒன்றைத் தருகிறது. அவர் கூறுகிறர்’ பிரிஹத் சரணர் (Brihat Charana)அல்லது நாடு விட்டு நாடு பெயரும் பெரிய -. என அழைக்கப்படும் தமிழ் பிராமணர்கள், மகத நாடு) மற்றும் மொலகு என இரு பிரிவாகவும், மொலகு பிரிவினர் மீண்டும் கண்டர-மாணிக்கம்(Kandra Manikkam) மாங்குடி (Mangudi); மற்றும் சத்திய மங்கலம் ( Sathiya Mangalam ) எனப் பிரிவு பட்டனர், மேற் கூறிய அனைத்தும் மேற்கு மலைத் தொடர்ச்சியை ஒட்டிய மேட்டு நிலங்களைத் தேர்ந்து கொண்டு, இன்றைய மைசூர் மாநிலம், மலபார், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சார்ந்த சிற்றுார்களில் வாழத் தொடங்கி பின்னர் மேற்குக் கடற்கரை வரை பரவலாயினர் 19 தொடர்ந்து அசோகன் குறிப்பிடும் சத்ய புத்ரா நாடு, சத்திய மங்கலமாம் என்றே நான் (வி. எ, ஸ்மித்) கருது கின்றேன், சத்ய புத்ரர் நாடு, பூனாவை அடுத்துள்ள மலையிடை நாடு எனப் பேராசிரியர் பந்தர்கர் கூறுவதை, 157