பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகூரின் மீது, பின்னர் படையெடுத்து வந்தனர். ஆகவே கோசர்கள். மெளரியர்களுடைய நண்பர்களாக இருக்கலாம்" என்றும் கருத்து அறிவித்துள்ளார். 6 திரு . என். சுப்பிரமணியன் அவர்களின் கூற்று : திருவாளர் என். சுப்பிரமணியன் அவர்கள் 1966ல் வெளிவந்த சங்ககால அரசியல் (Sangam Polity) எ ன் ற தம் நூலின் 16 - ஆம் பக்கத்தில், மெளரியர்களின் தென்னாட்டுப் படையெடுப்பு: ம ற் று ம் பண்டயெடுத்து வந்த மெளரியர்க்குத் துணை புரிந்த கோசர் ைக யி ல் மோகூர். தோல்வியுற்றது பற்றிய குறிப்பு உளது" என்று கூறியுள்ளார். - - 1973-ல் வெளிவந்த கி பி 1565 வரையான தமிழ்நாட்டு suTsurg), (History of Tamil Nadu up to 1565–A.D) - என்றதம் நூலின் 36 ஆம் பக்கத்தில், மோகூரைப் பணிய வைக்க, தமிழில் மோரியர் என அழைக்கப்படும். மெளரியர்க்குக் கோசர் துணை புரிந்தனர் என்றும், வடுகர் துணைவர, மோரியர், தமிழகத்தின் வடபகுதியில் படை யெடுத்து நுழைந்தனர்; கோசர்க்குரிய துளு நாட்டிற்குக் கிழக்கில் உள்ளதான மோகூர், மோரியர்க்குப் பணிய மறுத்து விட்டது. மோகூரை வெற்றிகொள்ள மோரியர்க்'கும், வடுகர்க்கும், கோசர் துணைபுரிந்தனர்' என்றும் கருத்தறி வித்துள்ளார். - 7. திரு. எம். ஆரோக்கியசாமி அவர்களின் கூற்று : - திருவாளர். ஆரோக்கியசாமி அவர்கள், 1967-ல் வெளிவந்த, தமிழர்கள் இலக்கிய காலம் ' (The Classical Age of the Tamils) stor D job Brøsir 35.4% uáā; தில், படையெடுத்து வந்த மெளரியர்களின் து சிப் படை 7