பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஏற்றுக் கொள்ள இயலாது. அது உண்மையில் ஒரு தமிழ் நிலமே. நான் கொண்ட கருத்தே முறையானது என நான் நம்புகிறேன்’ என முடித்துள்ளார்.98 திருவாளர் வி, ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் கருத்து : இந்திய நாகரீகம் என்ற ஆய்வு இதழில், கோசர்" தென்னிந்திய வரலாற்றில் அவர்கள் இடம்’ என்ற தலைப் பில் எழுதியுள்ள தம் கட்டுரையில் திருவாளர் வி, ஆர் இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் பின் வருமாறு கூறியுள் öss。 "பண்டைத் தமிழரின் சங்க இலக்கியங்கள் பழங்குடி யினர் பலரைக் குறப்பிடுகின்றன அவர்களில் கோசர் இனம் தென்னிந்தியாவின் பண்டைய வரலாறு எழுது வோர்க்கு விளங்கா ப் புதிராகவே உளது. கோசர் தமிழ் நாட்டிற்கே உரியவரா அல்லது வெளி நாட்டவரா என்ற கேள்வி தென்னிந்திய வரலாறு எழுது வோர் கவனத்தை இன்னமும் ஈர்த்துக் கொண்டேதான் உளது. அவர்கள், தமிழகத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற கொள்கைக்கு ஆதரவான நல்ல சான்று எதுவும் இல்லை அவர்களை அடையாளம் காணப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன, அமரர் கனகசபை அவர்கள் 1800 ஆண்டுகட்கு முற் பட்ட தமிழகம்’ என்ற தம் ஆங்கில நூலில், கோசர் என்ப வர் குஷானர்களேயன்றி வேறல்லர் : இவர்களில் ஒரு கிளை கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பாக்டிரியாவையும் கி.மு. 1ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கு பகுதிய்ை 'யும் வென்று கைக் கொண்டார்கள். அவர்கள் பூச்சி மரபின் நான்கு கிளைகள்' எனக் கூறியுள்ளார்,' 158