பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்ங்னமாயின் கோசர் மண்ணின் மைந்தர்கள் அல்ல ராகக் காணப்படுவர். அது உண்மையாயின் அவர்கள் சேரநாட்டின் வடக்கே மலபார் கடற்கரையை ஒட்டிக் குடியேறிய,வெளி நாட்டவராவர். ஆனால், கோசர்களைக் குஷானர்களாகக் கொள்வது சிறிது கடினமே, அசோகன் காலத்திற்கு முன்னர் தென் னாட்டின் மீது மோரியர் படையெடுப்பு ஒன்று இருந்தது என்பது பேராசிரியர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப் படடது, இந்த உண்மையின் அடிப்படையிலும் அடுத்துக் காட்டப்படும் காரணங்களாலும், கி. மு. மூன்றாம் நூற் றாண்டில் ஏன் அதற்கும் முற்பட்ட காலத்தில், இந்தக் கோசர், தமிழ் நாட்டின் நிலைத்த குடியினராகி விட்டனர். தங்களுக்கெனத் தனிநாடு வகுத்துக் கொண்டனர். ஆற் றல் மிக்க படை மறவர்களாக விளங்கினர் எனக் கொள்ளலாம், அவர்களின் அரசியல் தொடர்பு, பழந்தமிழ்ப் பேரரசு கள் பல வற்றாலும் நாடிப் பெறப்பட்டன. கோசர் தொ டர்பாகச் சங்க இலக்கியங்களில் கூறப்படும், செய்திகளும் நிகழ்ச்சிகளும், அவர்கள், கி. மு. மூன்றாம் நூற்றாண்ட ளவிலேயே, தமிழர்களாகி விட்டனர், தமிழ் நாட்டின் நிலைத்த குடியினராகி விட்டனர் என்ற உண்மைகளை உறுதி செய்கின்றன. இவ் விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், கோசர் குடியேற்றம், கி. மு. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தே, ஏன் அதற்கும் முந் திய காலத்தே நடைபெற்றிருக்க வேண்டும் எ ன க் கொள்ளலாம்.28 - ஆக, திருவாளர். வி. ஆர். இராமச்சந்திர தீகூகிதர் அவர்களும், இவர்களைக் குஷானர் களாகக் கொள்வது இயலாது” எனத் தொடங்கி, இடையில், கி. மு. மூன் றாம் நூற்றாண்டில், அவர்கள் தமிழர்களாகவே ஆகிவிட் 159