பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டனர்' என முடித்தார், என்றாலும், இறுதியில் “கோ சரின் குடியேற்றம், கி. மு. நான்காம் நூற்றாண்டிற்கும், அல்லது அதற்கும் முற்பட்ட காலத்தும் நிகழ்ந்திருக்க வேண்டும்' என முடித் திருப்பதன் மூலம், கோசர் யாவர் த மி ழ் மண்ணின் மைந்தரா? வந்தேறிகளா என்பதில் தமக்கும் தெளிவு இல்லை என்பதையே காட்டிச்சென் று ள்ளார். திருவாளர். டாக்டர். எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் கருத்து : மேதகு ஆசிய சங்கத்தின் வெளியீடு (lournal of Royal Asiatic Society) 1923 ஆம் ஆண்டு இதழில், திருவாளர் டாக்டர். எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் பின் வருமாறு கூறியுள்ளார். ‘இவர்கள் (கோசர்) இராமாயணத்தில் வரும் கோச கோசர் (Kosakaras) போலும், ஒரு பழங்குடியினர் ஆதல் கூடும். முத்ராராக்ஷஸா என்ற நாடகம் கூறுமாறு சந்திரகுப்தன் சார்பாக, பாடலிபுத்ரம் வரை படையெடுத் துச் சென்ற காசர் (Khasal) என்ற பழங்குடியினர் இவரா தல் கூடும். மனுவின் படி 10:20-22) இவர்கள் கூடித்ரிய விராடர்கள் ஆவர். உசானர் கூற்றுப்படி, நீர் ஊற்று களில், தண்ணிர் எடுப்ப வரும், தண்ணிர் பங்கிடுபவரும் ஆவர்' - - . திருவாளர். எஸ். கே. அய்யங்கார் அவர்களின் இக் கருத்தை, திருவா ளர் வி. ஆர் ஆர்.தீகூகிதர் அவர்கள் ஏற்க வில்லை. 'கோசகாரா என்பது,இன்றைய அஸ்ஸாம் மாநிலத்தைக் குறிப்பதாகும். பண்டைய அஸ்ஸாம் நாட் டிலிருந்து மக்கள் தமிழகத்திற்கு வந்து குடியேறினர் என்பது நம்பக் கூடியதன்று. ஒரு கட்டுக்கதை' எனக் கூறி மறுத்துள்ளார். 160