பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழையன் என்பவனைத் தாக்கினார். அவன் அவர்களைப் புறங்கண்டு துரத்தினான். கோசருக்குத் துணைபுரிய மகதத்தினின்று ஒரு புதுப்படை வந்தது' என்றும் கூறியுள்ளார். - 9. டாக்டர் கே. கே. பிள்ளை அவர்களின் கருத்து. சென்னைப் பல்கலைக் கழக் வரலாற்றுத் துற்ைத் தலைவராக விளங்கிய டாக்டர் கே. கே. பிள்ளை அவர்கள், 1961ல் வெளியிடப்பட்ட டாக்டர். ரா. பி. சேதுப் பிள்ளை அவர்களின் வெள்ளி விழா மலரில் (Dr. R. P. Sethu Pillai Silver Jubilee Commemoration Volume-1961) stop flu, 'தமிழகமும் மோரியர் படையெடுப்பும் என்ற தலைப்பிட்ட கட்டுரையில். வடுகர் முன்வர, அவரைத் தொடர்ந்து தென்திசை நோக்கி மோரியர் படையெடுத்து வந்தனர். கோசர், தம் அண்மையிலிருந்த நாடுகளை அடக்க முயன் றனர்; அம் முயற்சியை மோகூர் தலைவன் பழையன் தடுத்தான்; அவனை அடக்கும் பொருட்டுக், கோசர் மோரியரது உதவியை நாடவே, மோரியர், தம்தேர்களுடன் மலைகளைக் கடந்து வந்தனர் என்று கூறியுள்ளார். 10. திரு. பொன். சுப்பிரமணியம் அவர்களின் கருத்து. தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1983ல் வெளியிட்ட :தமிழ் நாட்டு வரலாறு: சங்க காலம்-அரசியல்' என்ற நூலில், :காலக்கணிப்பு’’ எனத் தலைப்பிட்டு கட்டுரை எழுதியுள்ள, வரலாற்று விரிவுரையாளர் திரு. பொன், சுப்பிரமணியம் அவர்கள், அந்நூலின் 120ஆம் பக்கத்தில் கோசர்கள், மோகூரைத் தாக்கியபோது, மோகூர் அரசன் பணியாமையால், அவனை வெல்ல முடியாமல், கோசர்கள் மிோரியரின் துணையை நாடினார். மோரியர்கள் வம்ப 9.