பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுகர் துணையுடன் தமிழகத்தில் நுழைந்து தாக்கினர் எனக் கூறியுள்ளார். 11. டாக்டர். அ. கிருட்டிண சாமி அவர்களின் கூற்று : தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1983-ல் வெளி யிட்ட, ‘தமிழ் நாட்டு வரலாறு சங்க காலம்-அரசியல்’ எ ன் ற நூலில், 'கொங்கர் பற்றிய வரலாற்றினை எழுதியிருக்கும், தமிழ் நாட்டு வரலாற்று வெளியீட்டகப் பதிப்பாசிரியர் திருவாளர் டாக்டர். அ. கிருட்டிண சாமி அவர்கள். அந்நூலின் 411-ஆம் பக்கத்தில், மோரியரு டைய சேனையில் தூசிப்படையாகக் கோசர் என்ற படை வீரர்களும் இருந்தனர். மோரியரும், கோசரும் சேர்ந்து கொங்கு நாட்டுப் பழையனுடைய அரண் மிகுந்த மோகூர் எ ன் ற கோட்டையை முற்றுகையிட்டனர்; ஆனால், மோகூர்ப் பழையன், முற்றுகையிட்ட வடவடுகர், கோசர், முதலியோர் அடங்கியசேனைகளை முறியடித்துக் கொங்கு நாட்டை விட்டுத் துரத்தி விட்டான் தோற்றோடிய மோரி யப் படைத்தலைவன் மீண்டும் பெரும்படையொன்றை அனுப்பும் படி பாடலிபுரத்திற்குச் செய்தி அனுப்பினான். மகத நாட்டிலிருந்து பெரும் படையொன்று தமிழகம் நோக்கி வந்தது எனக் கூறியுள்ளார். மோரியர், மோகூர் மன்னன் பழையன் மாறன்,கோசர் ஆகியோர் வரலாறு உணர, எனக்கும் மேலே கூறிய தமிழ்ப் பேராசிரியர்கள், வரலாற்றுப்பேராசிரியர்களுக்கும் துணை நிற்பன, கீழ் வரும் பாடல் வரிகளே : 1, பழையன் மோ கூர் அவையகம் விளங்க, நான் மொழிக் கோசர் தோன்றியன்ன? -மதுரைக்காஞ்சி : 508-509 10 -