பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறை" -அகம் 281 : மாமூலனார் 6. விண் பொரு நெடுவரை இயல் தேர் மோரியர் பொன் புனை திகரி திரி தரக் குறைத்த அறை' - -அகம் : 69; உமட்டுர் கிழார் மகனார் . பரங்கொற்றனார் 7. "வென் வேல், விண் பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண் கதிர்த் திகிரி திரி தரக் குறைத் த உலக இடைகழி அறைவாய்' - -புறம்: 175; கள்ளில் ஆத்திரையனார் தலையாளங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் அவையில், பழையன் மாறன் தலைமையில், அவன் ஏவல் கேட்கும் படைவீரர்களாக விளங்கிய கோசர், அவர்களின் சேவை, பாண்டி நாட்டில் இனித் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்ட போது,அவர்களின் தலைவனாம் பழையன் மாறனின் கோட்டை நகராம் மோகூர் சென்று, அவன் அவைக்குப் புகழ்சேர வாழ்ந்திருந்தனர். மோகூர்க் கோட்டையின் நடுவிடத்தே வளர்ந்து பல் லாண்டு காலமாகக் காக்கப்பட்டு, நிழல் தந்து, நிற்கும். பெரிய ஆலமரத்து அடியாம் ஊர் மன்றத்தில், முரசுகள் முழங்க, வலம்புரிச் சங்குகள் ஒலிக்க நாலூர்க், கோசர் களும் ஒன்று திரண்டு வந்தமர்ந்து தம்முன் வந்து வேண்டி நிற்பார்க்கு வழங்கும் வாக்குறுதிகளை, வாய்மை தவறாது நிறைவேற்றி வைத்தனர். அதனால் நாட்டவரெல்லாம், "வாய்மொழிக் கோசர் என வாயாரப் பாராட்ட, பெரு வாழ்வு வாழ்ந்திருந்தனர். -- .. - - 12