பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GuGaు எடுத்து வைத்த பாக்கள் அனைத்தையும்" ஒருங்கு வைத்து நோக்கியவழி, நாம் அறியலாம் வரலாற் றுச் செய்தி இவ்வளவே. - - மோரியர், தேர்ப்படை தடையின்றி வர,மலைப்பாறை களை உடைத்துச் செய்த வழியாக" மோரியர் தமிழகத்துள் நுழைந்தனரா? அவர் முடிவு என்ன ஆயிற்று என்பதுபற்றி யோ, மோகூர் அரணை அழிக்க முனைந்த வடநாட்டு அரசர்களை முறியடித்துத் தமிழகத்துக்கு, வடநாட்டவ ரால் நேர இருந்த கேட்டினை இல்லாமல் செய்துவிட்ட கோசர்களும், அவர்கள் தலைவன் மோகூர்ப் பழையனும் அதன் பின்னர் என்ன ஆனார்கள் என்பது பற்றியோ சங்க இலக்கியம் ஏதும் கூறவில்லை. திருவாளர். ரா. இராகவையங்கார், அ டி யே ன், தவிர்த்த ஏனைய தமிழ்ப்பேராசிரியர்களும் வரலாற்றுப் பேராசிரியர்களும் மாமூலனாரின் அகம் 251, 281 பாக்கள் அளவிலேயே தங்கள் வரலாற்றுத் திறனாய்வினை வரை' யறுத்துக் கொண்டனர்; செந்தமிழ்ச் செல்வி' இதழ் 457ம் பக்கத்தில் 1952-53ல் கோசர் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், அடியேனும் அத் தவறுக்கு உள்ளா னவன்; 1955ல் திருத்திக்கொண்டேன். - ஏனைய திறனாய்வாளர்களும், மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சியில் வரும், . 'பழையன் மோகூர் அவையகம் விளங்க நான் மொழிக்கோசர் தோன்றியன்ன28 'பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும் பெயர் மாறன் தலைவனாகக் கடந்தகு வாய்வாள் இளம்ப்ல் கோசர் இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப24 14