பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்கள் தம் முடைய கோசர் (ஓர் சிற்றாராய்ச்சி) என்ற நூலில் 'இம் மோகூரும் அதனை அடுத்து ஆலம்பலமும், கள்ளக் குறிச்சிச் சேகரத்து இன்றும் முள்ளனவாதல் நோக்கிக் கொள்க மோரியர் குறைத்த குன்றத்து அறைவாய் கள்ளக்குறிச்சி மலையிடை வழியாகும்; அல்லது செங்கண் மராஅத்து அமைவாய் வழியாகுமென்க. இவ்வூரே செங் குட்டுவன் பொருது வென்றதா மென்பதும், கோசர் வந்து தவியதாகு மென்பதும் குட்டுவன் அஞ்சூர், கோசர் பாடி என்னும் ஊர்கள் இம் மோகூர்ப் பக்கத்துண்மையான் உய்த்துணரலாம். மோகூரை அடுத்துள்ள ஆலம்பலம் என்ற சிற்றுரே கோசர் தோன்றிய மூதா லத்துப் பொதி யிலாகு மென்க. பொதியில் அம்பல மென்பது த மி ழ் வழக்கு' என்று மோகூர் யாதுளது என்பது குறித்து தம் கருத்தைக்குறிப்பிட்டுள்ளார்." - - அடியேன் (புலவர் கோவிந்தன்) 1960 எழுதிய தமிழ கத்தில் கோசர்கள்’ என்ற நூலில் தென்னார்காடு மாவட் டத்தில். கள்ளக்குறிச்சியை அடுத்த ம ைல நாட்டின் அகத்தே விளங்கும் மோகூர் என்றும், அவன் (பாண் டியன்), அக்கோசர் குடியிருப்புகளை அம் மோகூர்க்கு அணித்தாகவே ஆக்கி அளித்தான்: அவ்வாறு அவன் அளிக்கக் கோசர் வாழ்ந்த கோநகர்கள், ஆலம்பலம், கோசர்பாடி, எனும் பெயர்களொடு கள்ளக்குறிச்சியை அடுத்து இன்றும் இருந்து காட்சி அளிக்கின்றன என்றும் கூறியுள்ளேன். ; : . • . - இவ்வாராக, மோகூர் யாண்டுளது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் ஆய்வாளர்களிடையே நி ல் வி வருகிறது. மோகூர் யாண்டுளது என்ற கேள்விக்கு விடைகாண வேண்டின் அக்காலத்திய வேந்தர்களும், வேளிர்களும், குறுநில மன்னர்களும் , மறவர்களும் ஆகிய 21