பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக வரலாற்றுத் தலைவர்கள், அவர்களைப் பாடிய புலவர்கள் அப் புலவர்கள் பாடிய பாக்கள் அளிக்கும் செய் திகள் ஆகியவற்றை ஆராய்தல் இன்றியமையாதது, சேர மன்னன் செங்குட்டுவனை பாடியவர் பரணர் : அப் பரணரால் பாடப்பெற்ற சோழ அரசர்கள் மூவர்; சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, கரிகால் பெருவளத் தான், வேல் பஃறடக்கை பெருவிறற்கிள்ளி0 ஆகியோரே அம் மூவர் ஆவர். செங்குட்டுவன் மோகூர் மன்னனை வென்றான். அம் மோகூர் பணியாமையால் மோரியர் வந்தனர். அம் மோகூர் பாண்டி நாட்டு மோகூர் என்ற ஊராயின், அம் மோரியர், முதற்கண், அப் பாண்டி நாட்டின் வடக்கில் உள்ளதான சோழ நாட்டைக் கடந்தே வந்திருக்க வேண்டும். அப் போது சோழநாட்டு அரியணையில் அமர்ந்திருந்த, மேலே கூறிய மூவரில் யாரேனும் ஒருவரை வெற்றி கொண் டிருக்க வேண்டும். கோசர் வரலாறு அறியத் துணைபுரியும் சங்கப் பாடல் களில் பெரும் பகுதியைப் பாடியவர் பரணர். கோசர்களை, அவர்கள் தலைவன் பழையன் மாறன், அவன் தலைநகர் மோகூர், அவன் காவல்மரம் வேம்பு; அவன் பால் தோல்வி கண்ட அறுகை, அதனால், அவன் செங்குட்டுவனால் பெற்ற அழிவு ஆகியவற்றை அறிந்து அறிவித்திருக்கும் பரணர், அம் மோகூர் பாண்டி நாட்டில் இருந்து,மோரியர் அம்மோகூர் வரை வந்திருப்பராயின்,அவர்கள் தமிழகத்து வடவெல்லைக்குள் நுழைந்து, வேங்கடத்தை அடுத்திருக் கும் தொண்டைநாட்டவரை, அத்தொண்டைநாட்டிற்குத் தெற்கில் உள்ளதான சோழநாட்டை அப்போது ஆண்டி ருந்தவர்களை வெற்றி கொண்டதைப் பாடியிருப்பர். ஆனால், அவை குறித து அவர் ஏதும் கூறினாரல்லர். 22