பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்களில் மூவர், சேரர்களில் இருவர், பாண்டி யரில் ஒருவர், வள்ளல்களில் நால்வர். அதியமான் போலும் குறுநிலத் தலைவர்கள், ஆட்டனத்தி போலும் மறவர்கள் 26 பேர்கள், ஆக 36 பேர்களையும், சோழ நாட்டுக் காவிரி, சேரநாட்டுப் பேரியாறு, போலும் ஆறு களையும் இமயம், எழில், நவிரம்; கொல்லி, பறம்பு பொதியில், வேங்கை முதலாம் மலைகளையும், அரிமண வாயில் முதல் வெண்ணிவரை 27 ஊர்களையும் அறிந்து கூறியிருக்கும் பரணர், மோகூர் படை சோணாட்டைக் கடந்து வந்திருந்தால், அதைத் தம் பாட்டில் எங்கேனும் குறிப்பிடாதிருக்க மாட்டார். மிகப் பெரிய நிகழ்ச்சி; ஆகவே, விரிவாகவே கூறியிருப்பர். ஆனால், அது குறித்து ஒரு வரி கூட இல்லை ஆகவே, மோரியர், சோழ நாட்டைக் கடந்திருக்கவும் இல்லை அவர் எதிர்த்த மோ கூர். சோழ நாட்டிற்குத் தெற்கில் உள்ளதான பாண்டி நாட்டு மோகூராக இருத்தலும் அறவே இயலாது. மோகூர் கொங்கு நாட்டைச் சேர்ந்தது என்பதையே வரலாற்றுச் செய்திகள் உறுதி செய்கின்றன. வடநாட்டுப் பேரரசன் ஒருவன் தென்னாடு வந்ததும், தென்னாட்டுப் பேரரசன் ஒருவன் வடநாடு சென்றதும் ஆகிய செய்திகள் இதையே உறுதி செய்கின்றன. சந்திரகுப்த மெளரியப் பேரரசன், அரச வாழ்வை வெறுத்து துறவறம் மேற்கொண்டு ஆசிரியர் பத்திரபாகு வோடும், தன்னொத்த மாணவர்கள் பன்னிராயிரவரோடும் பாடலி விடுத்து மகிஷ நாடு என்றும் எருமைநாடு என்றும் பண்டு அழைக்கப் பெற்ற இன்றைய கன்னட மாநிலம் சரவணபெல்கோலா வந்து தங்கினான் என்பது வரலாறு. கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் சந்திர குப்தன், துறவறம் பூண்டு பத்திரபாகுவின் மாணவனாகி 23