பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னொத்த'மாணவர் பன்னிராயிரவரும், மைசூர் மாநி லத்தில் உள்ள சரவண் பெல்கோலாவுக்கு வந்து சேர்ந்தான் என்று திருவாளர் பி.டி, சீனிவாச அய்யங்கார் அவர்கள் கூறியுள்ளார். ‘. . . - : . . . மோரியனான சத்திரகுப்தன், மகிஷ மண்டலத்து சிரவண வேள் குளத்து வந்து தங்கியது அப்பக்கத்துச் சாச னங்களானும் பழைய சரிதங்களானும் கேட்கப் படுதலான்’ என்பது திருவாளர் ரா. இராகவ அய்யங்கார் அவர்களின் கூற்று,' - . . . . . - அதேபோல், கண்ணகி சிலைக்கான கல் எடுக்க இமயம் சென்ற செங்குட்டுவன் சேரநாட்டிலிருந்து வழிப் பயணம் தொடங்கிய இட்ம் நீலகிரி என்று கூறுகிறது சிலப்பதிகாரம் 18 . . . . . . . . . . நீலகிரியை விட்டு நீங்குகின்றான் செங்குட்டுவன்: அடுத்தகணமே கங்கைக் கரையில் காணப்படுகின்றான். திரும்பும்போதும் அதே நிலை; அவ்வகையில் செங்குட்டு வன் கடந்து சென்றிருக்க வேண்டிய, தக்கணம், விந்திய மலைச்சாரல் கங்கைப் பெருவழிகளின் இயற்கைக் காட்சி களை விளக்கிக் கூறும் ஒரு பொன்னான வாய்ப்பினை ஆசிரியர் கை நழுவ விட்டுள்ளார்" என்று பி.டி, சீனிவாச அய்யங்கார் கூறுவதையும் நினைவில் கொள்ள வேண்டும், ஆக, செங்குட்டுவன் நீலகிரியிலிருந்து, கங்கைக்கரை யை அடைந்தான் என்றால், அவனும் கொங்கு நாட்டைக் கடந்தே சென்றிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் வைத்து நோக்கிய வழி, மோரியரும், அவ்வழியில் தான் தமிழ்நாடு வந்திருக்க வேண்டும், ஆகவே, பழையன் மாறனுக்கு உரிய மோகூர், கொங்கு நாட்டில் உள்ளது. என்பது உறுதியாகிறது. . . . . - 24