பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற் கூறியவற்றைக் கொண்டு நோக்குமிடத்து இமயப் பகுதியொன்றிற்கு வழங்கும் இப்பெயர், சோழன் தொடர்பு பற்றி வந்ததாகக் கூடாதோ என்பதே என் ஆராய்ச்சி. இம்மலையடியாகவே, இதனையடுத்துள்ள கணவாயுப் அப்பெயர் பெற்றதாக வேண்டும். சோல’ (Chola) என்பதற்கு ஸிக்கிம், திபெத் பாஷைகளில் வேறு பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. லா என்பதற்குத் திபெத் பாஷையில் கணவாய் என்ற பொருள் உண்டு. “Eğl-sor’ (Natu-la), “Glêg svů-spir’ (Jalap-la) sr6MT # காண்க, ஆனால், சோல’ (Chola) என்பது அவ்வாறு இரு சொல்லுடையதன்றி, ஒரு சொல்லாகவே ம ைல க் கு வழங்கி வருவதும், அச்சொற்கு வேறு பொருள் காணான்ம யும் நோக்கத் தக்கன. - அதனால் திருமாவளவன், அப்பிரதேசத்தைக் கைப் பற்றி ஆண்டுள்ள மலைச் சிகரத்தில் தன் புலிப் பொறியை நாட்டி, அங்கே தன் ஆணையை நிறுவிய கால முதலா, அம்மலை அவ்வாறு பெயர் பெற்றது போலும் என்று கருத இடம் தருகிறது இமயத்துக் கப்பாலும், அவ்வளவன் செல்லக் கருதியிருந்ததை அம்மலை தடுத்து விட்டதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டதற்கு, மேற்குறித்தபடி அச் சோழன் சென்ற காலத்தே பனியால் முழுதும் மூடப்பட்டு அக் கணவாய் அடைபட்டிருந்தது என்பதே கருத்துப் போலும்.” - - - அண்மைக் காலத்தில் இந்தியப் பெருநாட்டின் முதல் தலைமை அமைச்சராம் பெருமை பெற்ற, பாரத ரத்னம் ஜவகர்லால் நேரு அவர்கள் காலத்தில் (1962) இந்தியா வுக்கும், சீனாவுக்கும் இடையில் மூண்ட போரில், இந்தியா இழந்து விட்ட சில லட்சம் சதுர மைல்களைக் கொண்ட 32