பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கோசரும், பொலம்பூண் கிள்ளியும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புகழ்பாடும் பாடல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி. அதன் ஆசிரியர் மாங்குடி மருதனார். அபபாண் யன் புகழ் பாடும் பிறிதொருநெடும்பாட்டு நெடுநல்வாடை அதன் ஆசிரியர் நக்கீரர். அப்பாண்டியனின் சம காலத் தவரான இவ்விரு பெரும்புலவர்களும் தம்பாடல் வரிகளில் 'கோசர் குறித்துச்சில அகச்சான்றுகளை அளித்துள்ளனர் 1. “பழையன் மோகூர் அவையகம் விளங்க நான் மொழிக் கோசர் தோன்றியன்ன ? -மாங்குடி மருதனார்; மதுரைக்காஞ்சி : 501-508 2. 'பொய்யா நல்லிசை நிறுத்த புனை தார்ப் பெரும் பெயர் மாறன் தலைவனாகக் கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின்நின் வாய்மொழி கேட்ப’’ உமாங்குடி மருதனார்: மதுரைக் காஞ்சி ; 771-774 3, "வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி, நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி, பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும் பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினம் அன்ன கெழு நகர்' - -நக்கீரர்; அகநானூறு: 205 37