பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. .நெடு நகர் இழையணி யானைப் பழையன் மாறன் மாடம்மலி மறுகின் கூடல் ஆங்கண் வெள்ளத் தானையொடு வேறுண்டு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல்ல மர் சாஆய்க் கடும் பரிப் புரவியொடு களிறு பல வெளவி ஏதில் மன்னர் ஊர் கொளக் கோதை மார்பன் உவகையிற் பெரிதே' -நக்கீரர்; அகநானூறு : 306 இவ் விரு பெரும் புலவர்கள் அளிக்கும், மேலே கூறிய அக்ச் சான்றுகள் மூலம் பெறலாகும் கோசர் பற்றில வரலாறு கீழ்வருமாறு : 'மோகூர் என்ற கோட்டை நகருக்கு உரியவன் பழை யன். அவன் அரசவைக்குப் பெருமை சேர்த்தனர். கோசர் படை மறவர்; பெரும் புகழ்மிக்க அம் மோகூர்ப் பழையன் பாண்டியர் குடிப்பெயர் குறிக்கும். "மாறன்’ என்ற சிறப் புப் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு 'பழையன் மாறன்’ எ ன வு ம் அழைக்கப்பட்டான். அப் பழையன் மாறனைப் படைத் தலைவனாகக் கொண்ட கோசர் படை, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கீழ்ப் பணிபுரியும் பல்வேறு படை அணி களில், ஒரு அணியாகப், பணிபுரிந்து வந்தது. பாண்டியர் தலைநகராம் கூடல் மா நகரின் காவல் பொறுப்பு, பழை யன் தலைமையில் இயங்கிய கோசர் படையிடம் ஒப்படைக் கப் பட்டிருந்தது, - அந்நிலையில், 'பொலம் பூண் கிள்ளி' என வும், கிள்ளி வளவன்' எனவும் அழைக்கப்பெறும், சோழ அரசன் ஒருவன பாண்டியர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள விரும்பினான்; தன் விருப்பம் நிறைவேற வேண் 38