பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுமானால் முதற்கண், பழையன் மாறன் தலைமையில் பணிபுரியும், கோசர் படையை அழித்தாக வேண்டும் என்பதை உணர்ந்தான். விரைந்து பாயும் குதிரைப் படை, களிற்றுப் படை களைக் கொண்ட பெரும் படையோடு வந்து, கூடல் மா நகரைத் தாக்கினான். ஆனால், கோசர் படைத்தலைவன் பழையன் மாறன், தன் தேர்ப்படை, யானை ப் படை களோடு சென்று கூடல் மாநகருக்கு அணித் தாக, அச் சோழனை வென்று. அவன் கொண்டு வந்த குதிரைப்படை களிற்றுப் படைகளைக் கவர்ந்து கொண்ட தோடு, சோழ னுடையவும், அவனுக்குத் துணை வந்த பிற அரசர்களு டையவுமான, பல ஊர்களைக் கவர்ந்து கொண்டான். பழையன் மாறனிடம், சோழன் பெற்ற இப்பெருந்தோல்வி அறிந்து அச் சோழர் குலப் பகைவனாகிய, சேரர் குலக் கோக் கோதை மார்பன் ம கி ழ் ச் சி அடைந்தான்." இவ்வளவே. இனி, கோசர்க்கும், பொலம் பூ ண் கிள்ளிக்கும் உள்ள உறவு பற்றி, வரலாற்றாய்வாளர்கள் கொண்டுள்ள கருத்தினைக் காண்போம். 1. அடியேன (புலவர், கா. கோவிந்தன்) கருத்து : அ) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட "சங்கால அரசர் வரிசை' என்ற வரிசையில், ஆறாவது வரிசையாக, 1955ல் வெளிவந்த, திரையன் முதலிய 29 பேர்கள்’ என்ற தலைப்புள்ள எ ன் நூலில், கோசர் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பில், - கோசர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் படையாளராகிப் பணி புரிவாரா 39