பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யினர். பாண்டியர் படையில் பணியாற்றும் கோசர்க்கு, மோகூர்க்கு உரியோனும் பழையன் என அழைக்கப் பெறு வோனும் ஆகிய மாறன் என்பான் படைத் தலைவனாய் விளங்கினான். பழையன் மாறன், பாண்டியர் படைத் தலைவனாய்க் கோசர் பெரும் படையோடு, பாண்டியர் தலைநகராம் கூடல் மாநகரைக் காத்திருந்த காலை, வெள்ளம் போல் பரந்திருந்த பெரும்படையுடைய கிள்ளி வளவன், கோசர் படையைக் கொன்று கூடல் மாநகரைக் கைக் கொள்வான் வேண்டிக் கூடலை வளைத்து நின்று பெரும் போர் புரியத் தொடங்கினான். அது கண்டு கடுஞ் சினம் கொண்ட பழையன் மாறன், கோசர் படை துணை செய்ய, தன் களிற்றுப் படையோடும் புறம் போந்து கிள்ளி வளவனை வளைத்துப் போரிட்டான். பாண்டியர் பெரும் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இழந்து தோற்றான், கிள்ளிவளவன். அவனுக்கு உரிய களிறுகளையும், குதிரைகளையும் கணக்கில கைப்பற்றிக் கொண்டான், கோசர் படைத் தலைவன் பழையன், அம் மட்டோடு அமையாது பாண்டி நாட்டை அடுத்திருந்த அக் கிள்ளிக்குரிய நல்ல ஊர்கள் பலவற்றையும் சோழர் பகைவன் சேரன் சிரிக்குமாறு கைப்பற்றிக் கொண்டான்' எனக் கூறித், தொடக்கத்தில் எடுத் தாண்ட நான்கு பாடல் வரிகளையும் அ. க ச் சான்றுகளாகக் காட்டி யுள்ளேன்.” ஆ) சென்னை, அருணா பப்ளிகேஷன்ஸ், 1960 நவம்பரில் வெளியிட்ட, ‘தமிழகத்தில் கோசர்கள்' என்ற என் நூலில் கோசர் படை, கூடன் மாநகரைக் காத்து நிற்பதை அறியாத பாண்டியன் பகைவர் எழுவரும், தம் எழுபெரும் படையோடும் போந்து பாண்டி நாட்டுத் தலைநகரை வளைத்துக் கொண்டனர். அதுகண் ட பாண்டியர் படையும் களம் நோக்கிப் புறப்பட்டு விட்டது. 40