பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் படையைக் கொன்று நெடுஞ்செழியன் நாட்டை அகப்படுத்திக் கொள்ளலாம் என்ற நினைவோடு வந்த கிள்ளி தன் நாற்படையை நான்மாடற் கூடற் போர்க் களத்தே விடுத்து, தன் நாடு நோக்கி ஓடத் தலைப்பட்டான் கிள்ளி களத்தே விட்டுச் சென்ற கணக்கற்ற களிறுகளையும் குதிரைகளையும் கைப்பற்றிக்கொண்ட பழையன், அவ் வெற்றியோடும் அமைதி கொள்ளாது தோற்றோடும் கிள்ளியைத் துரத்திச் சென்று பாண்டி நாட்டு எல்லைக் கண் உள்ள சோணாட்டின் பெரும் பகுதியைப் பாண்டியர் உடைமையாக்கி மீண்டான். கிள்ளியின் பகைவனாம் கோக்கோதை மார்பன் பார்த் துப் பரிகசிக்குமாறு அவனைப் பெருந் தோல்வியுறப் பண்ணிய பழையன் ம | ற ன் பேராண்மையினையும், அவனுக்குத் துணையாய், அவன் கீழ்ப் பணிபுரிந்த கோச் வீரர்களின் வாட்போர் வன்மையினையும் தம் அகத்துறைப் பாடல்கள் இரண்டின் இடையே வைத்து அழகுறப் பாராட்டியுள்ளார். தமிழ்ச் சங்கப் புலவர்க்குத் தலைவராம் தகுதி பெற்ற நக்கீரர்' என எழுதியுள்ளேன். 2. திரு. ரா.இராகவையங்கார் அவர்கள் கருத்து 1 1951ல், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியீ டான கோசர்" என்ற தலைப்புள்ள தம் நூலில் ஓரிடந்தில்8 திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள், - "சோணாட்டில் இவர் (கோசர்) வலி பெற்று வீறு தலைக் கண்டு பொறாது கிள்ளிவளவன் இவர் படையைச் சிதற அடித்தான் எனக் கூறிவிட்டுத் தம் கூற்றிற்குச் சான்றாக மேலே கூறிய அகச்சான்றுகள் நான்கினுள் 42 -