பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைப் பொருள்தான் என்ன என்பதை இனி, ஆராய் வோம்; இதோ அச் செய்யுள் : “வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்கு படை நூறி, நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும் பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினம்...” - பாட்டின் பொருள் : இதுவே அப்பாட்டு. இதில் கூறப்பட்டிருப்பதெல்லாம் கொடுக்கும் வாக்குறுதிகளைத் தப்பாமல் காக்கும் இயல்பு டைமையால் பெற்ற பு க ழ், தொலை நாடுகளிடத்தும் சென்று பலரும் அறியக் கிடக்கும் நல்லபுகழ் வாய்ந்தவரும் செல்வ வளத்தால் சிறந்தவரும் ஆகிய, கோசர் என்ற இனத்தவரின், வெற்றிப் புகழ் வாய்ந்த படையினை, அற வே இல்லாமல் போக அழித்து, அக் கோசருக்குரிய நிலத் தைக் கைப்பற்றிக் கொள்ள விரும்பியவனும், பொன்ன னிகளால் சிறப்புற்றவனும் ஆகிய, கிள்ளி என்ற சோழ னுக்கு உரியதும், பூக்களால் நிறைந்ததும், நீ ண், ட நீரோடைகளின் நடுவே அமைந்ததும், பல்வேறு மரங்கள் நிறைந்த தோட்டங்களை யுடையதும் பலரும் போற்றும் பெரிய புகழை உடையதுமான, காவிரிப்பூம்பட்டினம்’ என்பது மட்டுமே. - சொல்லாட்சி : இப்பாட்டில், அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருப்பவர் இருவர். ஒருவர், கோசர் மற்றொருவன், கிள்ளி, 45