பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்கன்"இருவரையும் அறிமுகம் செய்து வைத்திருக்கும் இப்பாட்டின் ஆசிரியர், அவர்களை எவ்வாறு அறிமுகம் செய்து வைத்துள்ளார். என்பதைக் காண்பது, அவ் விரு வரையும் ஆசிரியர் எவ்வாறு மதித்துள்ளார் என்பதை அறிவதற்குத் துணை செய்யும் ஆகவே, இனி அதைக் காண்போம். - - கோசரைப் பற்றிக் குறிப்பிடும் போது, வாய்மொழி நிலை இய கோசர் சேண் விளங்கு நல்லிசைக் கோசர்" "வளம் கெழு கோசர் என்றும், அவர் படையைக் கூறுங் கால், 'விளங்கு படை” என்றும் சிறப்பித்துக் கூறியுள்ளார். அக் கோசர் படையை வென்று அவர் நிலத்தைக் கைப். பற்ற விரும்பியவனைக் கூறுங்கால், அவன் இயற்பெயர் யாது என அறிந்து கொள்ள இயலா நிலையில், சோழர் குலத்தவர் அனைவரையும் பொதுவாகக் குறிக்கும், சென்னி, கிள்ளி, வளவன் போலும் பொதுப் பெயர்களில் ஒன்றாகிய "கிள்ளி' என்றே குறிப்பிட்டுள்ளார். கோசர் களையும், அவர்தம் படைகளையும் குறிப்பிட்டது போல் அல்லாமல், கிள்ளி அணிந்திருக்கும் அணியைமட்டுமே, அவனுக்குரிய சிறப்பாகக் கொண்டு, பொலம்பூண் கிள்ளி' எனக் கூறியுள்ளார். - . . கோசர்குரிய நாட்டைக் குறிப்பிடுங்கால், வ ரி ேத :நிலம்’ என்றும், கிள்ளிக்குரிய பட்டினத்தைக் குறிப்பிடுங் கால், பூவிரி.நெடுங்கழி நாப்பண், பெரும் பெயர் காவிரிப் படப்பைப் பட்டினம்’ எனச் சிறப்பு அடைக்கு மேல் அடை கொடுத்தும் குறிப்பிட்டுள்ளார். கோசர் படையை அழிக்க நினைத்த கிள்ளியின் செயலை நூறி என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளார். கோசர் நிலத்தைக் கைக் கொள்ள ஆசைப்பட்ட அவன் செயலை வெஃகிய என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளார், 46