பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் பொருளாட்சி : கோசரையும், கிள்ளியையும் குறிப்பிடுங்கால், શજ છે. ருக்கும் சொற்றொடர் நிலைகளைக்கண்டது மட்டும் போதாது, அச் சொற்றொடர்களில் ஆளப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லின் பொருளாட்சியையும் காணுதல் வேண்டும்; அப் போது தான் ஆசிரியரின் உள்ளத்தை உள்ளவாறு அறிதல் இயலும் இனி அது காண்போம். - வாய்மை : "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்' என்பது திருக்குறள்: "சாரணர் வாய்மொழி என்ற சிலப்பதிகாரத் - - - தொடர்க்குக் அடியார்க்கு நல்லார் அளித்திருக்கும் உரை 'சாரணர் அருளிச் செய்த உண்மை மொழி' என்பது. ஆகவே, கோசர், என்றும் தீமையில்லாத உரையே வழங்குபவர்; என்றும் உண்மையே பேசுபவர், என இச் சொல், கோசர்க்குப் பெருமை சேர்த்துளது. நிலை இய “நடுக்கின்றி நிலை இயது என்பதல்லது ஒடுக்கம் கூறார்' என்பது சிலம்பு ஆகவே, கோசர் வாய்மொழி நடுக்கம் இல்லாதது; ஒடுக்கம் இல்லாதது ; அதாவது அழியா இயல்புடையது; ஆகவே, இச் சொல் கோசர்களின் 47