பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிக்குச் சிறப்பளிப்பதன் மூலம் கோசர்க்குமேலும் புகழ் சேர்த்துளது. சேண் : ‘சிந்தை செல்லாச் சேணெடும் தூரம்' எ ன் ப து சிலம்பு சேண் நாறும் பிடவம்' என்ற முல்லைப்பாட்டு வரிக்கு18, நச்சினார்க்கினியர் அளிக்கும் உரை, துரிய நிலத்தே நாறும் பிடவம்' என்பது. ஆக கோசர் புகழ் சிந்தையாலும் நினைத்துப் பார்க்க மாட்டாத் .ெ த ா ைல நாடுகளிலும் சென்று பரவும் பெருமையுடையது. - விளங்கு : "கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல் தெரிதல் வல்லார் அகத்து 19 "குடிப்பிறந்தார் கண் விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து 20 என்பன திருக்குறள்கள். விளங்கும். என்பதற்குப் uಗಿಡಿ ಖg ಹಗೆ அ ளி க் கு ம் விளக்கம், 'உலகெங்கும் பரந்து வெளிப்படும்’ என்பது ஆக கோசர் புகழ் உலகெங்கும் பரந்து வெளிப்படும் பெருமை வாய்ந்தது என்பதால், இச் சொல்லும் கோசர்க் குப்பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளது. நல் இசை: இசை என்றாலே புகழைக் குறிக்கும், அதிலும் நல் இசை என்றால் புகழ் தரும் வழிகளில், நல்வழியில் பெற்ற 48