பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரெச்சம்; அது பொலம்பூண்கிள்ளி என்ற பெயரைக் கொண்டு முடிந்தது, ஒரு தொடரில், வினையெச்சங்களும், பெயரெச்சங் களும் ஆகிய பல எச்ச வினைச் சொற்கள் அடுக்கி வரும் நிலையில் அவ் வெச்சங்களின் நிலை என்ன? தொல்காப் பியர் அளிக்கும் விளக்கம் அல்லது விதி இது ; "பன் முறையானும் வினையெஞ்சு கிளவி சொல்முறை முடியாது அடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே'க இதற்கு உரையாசிரியர் விளக்கம் வருமாறு : "பல எச்சம் உடனடுக்கி வந்து பின் இறுதிக்கண் ஒன் நற்கேற்ற முடிபு ஏற்றக்கால் அதனால் அவ்வெச்ச மெல் லாம் முடிந்த பொருளாக முடிபுகொள்ளும் : உழுது உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான் என வரும் இஃது ஓரினத்து எச்சம் பல அடுக்கி வந்தது; அவற்றுள் பாடி என்பது வந் தான் என்னும் முடிவு கொண்டு முடிந்தது. அம் முடியே அவ்வடுக்கி நின்ற பிற வெச்சங்கட்கும் முடிபாயிற்று என்ற வாறு, எனவே, அது முடியாக்கால் ஒழிந்த எச்சங்கள் முடியா என்பதாம். சற்று விரிவாகவே விளக்க விரும்புகின்றேன். உழுது வந்தான்; உண்டு வந்தான்; தின்று வந்தான்; ஒடி வந் தான்; பாடி வந்தான் என்பன போல்' ஒவ்வொரு வினை யெச்சத்திற்கும் முற்று வினை கொடுத்து வழங்கிய வழி, “வந்தான்' 'வந்தான் என ஒரு சொல்லையே, மீள,மீள ஆளுவதால், சொற்றொடரும் நீளுகிறது; கேட்போரும் வெறுப்படைவர் அதனால் வினை முதல் ஒன்றாக, அதன் பல்வேறு வினைகளையும் அடுக்கிக் கூறும்போது, மேலே 32