பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் 306ல், நக்கீரர் விளக்கும் பழையன் மாறன் பொலம்பூண் கிள்ளி எனும் கிள்ளி வளவன் இவர்களுக்கிடையிலான போர்க்கள விளக்கமும், புறம் 78ல் இடைக் குன்றூர் கிழார் விளக்கும், தலையாலங் கானத்துப்போர் வென்ற நெடுஞ்செழியன்-பெயர் அறியா அவன் பகைவர், இவர்களுக்கிடையிலான போர்க்கள விளக்கமும் ஒன்றாக இருத்தல் காண்க. விளக்கங்கள் ஒன்றாக இருத்தல் மட்டும் அன்று; இருவர் கூறும் போர்க்களமும் ஒரு போர்க்களமே; முடிவு; பழையன் மாறன் அழிவோ, கோசர் படை அழிவோ அன்று; மாறாகப், பொலம்பூண் கிள்ளியின் அழிவே!