பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கோசரும், நன்னனும் அகுதையும் கொண்கான நாட்டின் ஏழிற்குன்றத்து ஒரு பகுதி பாழி சேரர் குலத்தோடு யாதோ ஒரு வகையில் உறவுடையனா கவே, உதியன் என்ற சேரர் குலப்பெயர் தாங்கிய நன்னன் என்பானுக்கு உரியது, நல்ல காவல்மிக்கது. அத்துணைக் காவல் உடையதாகவே, வேளிர்கள் தங்கள் பொற்கட்டி கள், பொன்னாலான அருங்கலக் குவியல்களை ஆங்கு வைத்துப் போற்றிக் காத்து வந்தனர். பாழியின் காவல் பொருப்பினைப் பறவைக் கூட்டத்தைப் பேணிப்புரக்கும் அருள் உள்ளம் உடையவனும், வெள்ளம் போலும் பெரும் படையுடையவனும், வேளிர்குடி வந்தவனும் ஆய, ஆஅய் எயினன் என்பான் பால் ஒப்படைத்திருந்தான் நன்னன். பாழிப் பெருஞ்செல்வத்தைக் கொள்ளை கொள்ள விரும்பினான் மிஞிலி என்பான் யானைப் படை, தேர்ப் படைகளைக் கொண்ட பெரும்படை ஒன்றும் அவன்பால் இருந்தது. பாழி நகர் அருஞ்செல்வத்தைக் கவர்ந்து கொள்ள அப்படையே போதும் என்றாலும், பாழிப் பெருஞ் செல்வத்தை எயினன் படை காத்து நிற்கிறது என்ற உண்மை நிலையோடு, அதைப் பேய்க் கூட்டம் ஒன்றும் காத்து நிற்கிறது என்ற குருட்டு நம்பிக்கை ஒன்றும் நிலவியிருந்தது. அதனால் எயினன் படையோடு மோதுவதற்கு முன்னர் அப் பேய்க் கூட்டம் விரும்பும் பெரும் பலி கொடுத்து பணித்தான் மிஞிலி: - தான் கொடுத்த பலியினை ஏற்றுக் கொண்ட பேய்க் கூட்டம் போரில் தன்க்குத் துணை நிற்கும் என்ற நம் 60