பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் செய்ய வேண்டிய கடமையைத் தான் செய்யத் தவறிய கடமையை, அகுதை செய்தது அறிந்து அவனை அழைத்துப் பாராட்டி நன்றி சொல்வது விடுத்து, நான் செய்ய வேண்டியதை இவன் யார் செய்வது? அது செய்து எனக்கு இழிவை அல்லவா செய்து விட்டான்' என அகுதை பால் கடுஞ்சினம் கொண்டான் நன்னன். நன்னன் இயல்பை அறிந்தவர் கோசர் இரக்க உ ண ர் வு இல்லாதவன். அத்தகையான் அகுதைக்கு யாதேனும் கொடுமை இழைக்கவும் கூடும், ஏன் கொல்ல வும் கூடும் என அஞ்சினார்கள் கோசர். அதனால், அகு தையை நன்னன் அணுக முடியாத அரண்மிக்க இடத்தே வைத்துக் காத்தனர். தமிழக வரலாற்றில், கோசர் ஆற் றிய அருஞ்செயல்களுள் ஒன்று இது. கோசரின் இவ்வருஞ்செயல் உணரத் துணைபுரிவன, கல்லாடனார், பரணர், LIff 6} Q} பாடிய பெருங் கடுங்கோ மாமூலனார் ஆகிய புலவர் பெருமக்கள் நால்வர் அளிக்கும் கீழே கொடுத்திருக்கும் பத்துப் பாக்கள். 1. பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம்' - . - - பாலை பாடிய பெருங்கடுங்கோ, 2. "நன்னன் பாழி அன்ன கடியுடை வியன் நகர்'2 - - மாமூலனார். 3. "நன்னன், எழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு 3 -பரணர் 62