பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிழல் செய்து உழறல் காணேன் யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினம் சிறந்து
உருவினை நன்னன் அருளான் கரப்ப
பெரு விதுப்புற்ற பல்வேள் மகளிர்
குரூஉப்பூம் வைந்தார். அருக்கிய பூசல்
வசை விடக்கடக்கும் வயங்கு பெருந்தானை
அகுதை களைந்தாங்கு”8

—பரணர்


9. “அகுதை, களிற்றொடு
நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை”9

—பரணர்


10. “நன்றல் காலையும், நட்பிற் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபில் சூழ்ச்சியில்
புன் தலை மடப்பிடி அகவுனர் பெருமகன்
அமர்வீசு வன்மகிழ் அகுதை போற்றிக்
காப்புக்கை நிறுத்த பல் வேற் கோசர்”10

—கல்லாடனார்.

64