பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைகளையும் பரிசில் பொருட்களாக அளிப்பவன் என்ப தை அறிந்தவர் கோசர் அதனால், அகவல் மகளிர்சிலரை இம்முறை, “அணிகலன் வேண்டாம்; அவற்றிற்கு ஈடாக வழக்கமாகக் கொடுக்கும், பிடி யானைகளோடு, மேலும் சில பிடியானைகளைத் தருக" என வேண்டிப் பெறுமாறு பணித்து அகுதை பால் அனுப்பி வைத்தனர். அகவல் மகளிரும், அகுதைபால் சென்று, பரிசில், பொருட்களாக எண்ணற்ற பிடி யானைகளைக் கொண்டு வந்தனர். தம்மை மதித்துப் பரிசில் அளிப்பானைப் பாடிப்புகழும் இரவலர்கள், தம்மை மதியாத மன்னனுக்குப் பாடம் புகட்ட தம்மை மதிக்கும் மன்ன்னைப் பாடி, பரிசிலாகப் பெறும் யானைகளை, ம்தியாத மன்னனின் காவல் மரத்தில் பிணித் துப் போய் விடுவர் யானையின் ஈர்ப்பால், அக்காவல் மரம், வேரற்று வீழ்ந்து போய் விடும் தம்மை மதியாத மன்னன் பால், இரவலர்களும், புலவர்களும் நடந்து கொள்ளும் இம் மு ைற, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பதை உணர்ந்தவர் கோசர். பெருஞ்சித்திரனார் எ ன் ற புலவர். இளவெளிமான் என்ற மன்னன்பால் சென்று பரிசில்வேண்டியபோது,அவன் அவரை மதிக்காது போகவே, சினங் கொண்ட புலவர். குமணன் பால் சென்று அவனைப் பாடிப் பரிசிலாக யானை ஒன்றைப்பெற்று, அதை இளவெளிமான் காவல் மரத்தில் பிணித்து விட்டு,’’ “நின்னுர்ர்க் கடி மரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடுநல்யாண்ை எம் பரிசில்' எனக்கூறி அறிவுறுத்திச் சென்று விட்டார், இந் நிகழ்ச்சியை அறிந்திருந்தனர் கோசர், அதனால் அகவல் மகளிர், அகுதை பால் பெற்று வந்த பிடியானை 68