பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாதலால் இவ்வழக்கில் வேளிர் இடையிற்புக்குக் கொன்று முரண் போக்கல் இயலாதென் க. கோசர் அந்நியரால் கொல்லப்படத்தக்க எளியரல்லர் என்பதும் நினைக. இத் திதியன் அழுந்தை சோணாட்டு வேளிர் இருந்த அழுந் தூரின் வேறாய்க் குடமலை நாட்டிலிருந்த ஊராமென்கே என்றெல்லாம் கூறியிருப்பது காண்க. அழுந்தைத் திதியன் கோசர் குலத்தவன் என்பதற்குத் திருவாளர் அய்யங்கார் காட்டும் முதற் காரணம், 'குறும் பியனும், திதியனும் கோசரினமல்லராயின், கோசரைக் கொன்று முரண் போக்கல் ஆகாது. கோசர் பிழை, ஆக வே, இதில் வேளிர் இடைபுக்கு முரண் போக்கல் இயலாது" என்பது. பாழிநகர் வேளாம் நன்னனுக்காக, அவன் பகைவன் மிஞலியொடு போரிட்டு உயிர் துறந்தான் ஆஅய் எயினன் என்ற வேளிர் குலத்தவன் அவன் இறந்தமையால், அவன் உரிமை மகளிர் துயரைக் களைய வேண்டியது நன்னன் கடமை. ஆனால், அவன் அது செய்யாத போது அம் மக ளிர் துயரைத் துடைத்தான் அகுதை என்பான் தான் செய்ய வேண்டியதை இவன் செய்வதா என, அகுதைபால் சினம் கொண்டு நன்னன் அவனை அழித்து விடுவனோ என அஞ்சி அகுதையை அரண்மிக்க இடத்தே வைத்துக் காத்த தோடு அந் நன்னன் காவல் மரமாம் மாவையும் வெட்டி வீழ்த்தினர் கோசர். - ஈண்டு, வேளிர்களுக்குள் ஆன பூசலில், கோசர் தலை யிட்டு ஒரு முடிவு கண்டனர். ஆக ஓரினத்துக்குள் உள் ளாகும் பூசல் அவ்வினத்தாருக்குள்ளேதான் தீர்க்கப்படும் என்ற வாதத்தில் வலுவில்லை. - திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள் கூறும் இரண்டாவது காரணம் கோசர் அந்நியரால் கொல்லப் 76