பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'களிறு கண் கூடிய வாள் மயங்கு ஞாட்பின் ஒளிறு வேல்தானைக் கடுந்தேர்த் திதியன் புகலரும் பொதியில்' - பரணர் பொதியில் திதியன் கோசர் மரபினனா?ஆம் என்கிறார் திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள் தம்முடைய கோசர் ஓர் சிற்றாராய்ச்சி என்ற நூலில், திதியன்’ என்ற தலைப்பின் கீழ், இவன் பூதப்பாண்டியன் பாடிய அகப்பாட்டில், -

பொருநர்,

செல்ச மங் கடந்த வில் கெழு தடக்கைப் பொதியிற் செல்வன் போலத் தேர்த்திதியன் இன்னிசையியத்திற் கறங்கும் - - கன் மிசை யருவிய காடிறந்தோரே 8 என வருதலால், பாண்டியர்க்குத் துணையாவான் எனத் துணியப்படும் இவன் வேளிருள் ஒருவனான திதியனின் வேறாவனென்பது, - * "நாளவையிருந்த நனைமகிழ்த் திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த வாள்வாயன்ன வருஞ்சுர மிறந்தே 19 என்பதனாலறியலாம். இதன் கண் திதியன் வேளிரொடு பொருதற்கு உறை கழித்த வாளுடைமை கூறியதனால், இவன் வேளிருள் ஒருவனாகானென்று கொள்க என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியிருப்பதன்மூலம், “பொதி யில் திதியன் வேளிர் அல்லன்; ஆகவே, அவன், கோசர் மரபினன்' எனக் கூறாமல் கூறி முடிவு கட்டியுள்ளார். 7s