பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"செழியன் - ஆலங்கானத்து அகன் தலை சிவப்பச் - சேரல், செம்பியன், சினங்கெழுதி தியன் போர்வல் யானைப் பொலம்பூண் எழினி நாரரி நறவின் எருமை யூரண், தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன் . . . . . - என்று எழுவர். நல்வலம் அடங்க' என்கிறது அப்பாட்டு.' அழுந்தைத் திதியனையும், பொதியில் திதியனையும், கோசர் குலத்திற்குக் கொண்டுபோய் விட்ட திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள் தலையாலங்கானப் போர்த் திதியனை வேளிர் குலத்திற்கு வரவேற்றுள்ளார். தம் கோசர் என்ற நூலில், தலையாலங்கானத்துப் போரில் பாண்டியற்குப் பகையால் எதிர்த்து நின்ற ஐம் பெரும் வேளிருள் திதியன் என்ற பெயருடையானும் ஒருவன்' எனக் கூறியுள்ளார். இத்தி தியன் அவர் கூறுமாறு வேளிர் குலத்தவனா? பாட்டில் அந்த ஐவர் எவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளனர்; காண்போம்; அந்த ஐவராவர் 1. சினங்கெழு திதியன், 2. பொலம் பூண் எழினி, 3. எருமை ஊரன், 4. இருங்கோ வேண்மான், 5. இயல் தேர்ப் பொருநன். இவர்கள் ஐவ ருமே வேளிர் என்றால், இருங்கோ வேண்மான் மட்டும் தனியே பிரித்து வேண்மான் அதாவது வேளிர் குலத்தவன் எனக் கூறத் தேவை இல்லை. பிரித்துக் கூறப்பட்டுள்ளான், ஆகவே அவனை ஒழித்த நால்வர் வேளிர் அல்லர் என்பது தானே போதரும், 80