பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலும் ஏனைய நால்வரில் எருமை யூரனும் ஒருவன். அவன் வேளிர் அல்லன், பண்டு மகிஷதேசம் என வழங்கப்பட்ட மைசூர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் தோல்வியுற்ற, தலையாலங்கானப் போர் பாடிய நக்கீரரே, பிறிதொரு பாட்டில், அவன் ஒரு வடுகர் தலைவன், எருமை நாட்டான் அயிரை ஆற்றை எல்லையாகக் கொண்ட நாடுடையான் என விளக்கமாகக் கூறியுள்ளார்; அப்பாட்டு இது தான்;

“வன் தோள் வடுகர் பெருமகன்
பேரிசை எருமை நன்னாட்டு உள்ளதை

அயிரியாறு’16

உண்மை நிலை இதுவாகவும், தலையாலங்கானப் போரில் பங்கு கொண்ட ஐவரும் வேளிர்; அவர்களுள் ஒருவனாகிய திதியனும் ஒரு வேள், எனல் பொருந்தாது அவன் எக்குலத்தவனோ. திதியன் எனப் பெயர் கொண்ட - பலருள் ஒருவன் அவ்வளவே.

81