பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பழையன் மாறனும், மதுரையும் 'பொய்யா நல்லிசை நிறுத்த புனை தார்ப் பெரும் பெயர் மாறன் தலைவன் ஆகக் ஏந்தகு வாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின் வாய்மொழி கேட்ப' - -மதுரைக் காஞ்சி.771-76 “வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி' -அகம் 205-நக்கீரர் "நெடுநகர், இழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகின் கூட ல் ஆங்கண் வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த கிள்ளி வளவன் நல்லமர் சா அய்க் கடும்பரிப் புரவியொடு களிறு பல வவ்வி ஏதில் மன்னர் ஊர் கொள' -நக்கீரர்-அகம்-346 இம் மூன்று அகச் சான்றுகளிலிருந்து, “கோசர் தலைவ னாகிய பழையன் மாறன், பாண்டியர் படைத்தலைவனாய், அப்பாண்டியர் தலைநகர் கூடல் நகரைக் காத்திருந்தான் அப்போது, வெள்ளம் போல் பரந்த பெரும் படையுடைய, 83