இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழன் இதயம் தேவா ரம்திரு வாசகமும் திகமும் சேக்கி மார்புகலும் ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள் உரைகளும் தமிழன் வாழ்வாகும். தாயும் ஆனவர் சொன்னதெலாம் தமிழன் ஞானம் இன்னதெனும் பாயும் துறவு கொள் பட்டினத்தார் பாடலும் தமிழன் பெட்பெனலாம். நேரெதும் நில்லா ஊக்கமுடன் நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும் பாரதி என்னும் பெரும்புலவன் பாடலும் தமிழன் தரும் புகழாம் கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம் நிலைகொள் பற்பல அடையாளம் நின் றன இன்னும் உடையோனாம். சிற்பம் சித்திரம் சங்கீதம் சிறந்தவர் அவனினும் எங்கே சொல் வெற்பின் கருங்கல் களிமண்போல் வேலைத் திறத்தால் ஒளிபண்ணும். உழவும் தொழிலும் இசைபாடும் ; உண்மை ; சரித்திரம் அசைபோடும் இழவில் அழுதிடும் பெண் கூட இசையோ டழுவது கண் கூடு. 10